அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி; இந்த நேரத்திற்குள் பணிக்கு வரவில்லையெனில்.. - முக்கிய உத்தரவு!
மத்திய அரசு ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்துக்கு வர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சுற்றறிக்கை
மத்திய அரசு அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும். ஆனால், சில மத்திய அரசு ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதாகவும், சீக்கிரமாக புறப்பட்டு செல்வதாகவும் புகார்கள் எழுந்தது.
மேலும், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையை பலரும் பயன்படுத்தவில்லை என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் அலுவலகத்துக்கு வர வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் "ஊழியர்கள் காலை 9.15 மணிக்குள் பணிக்கு வர வேண்டும்.
அரை நாள் விடுப்பு
அப்படி வராத பட்சத்தில் அரை நாள் சாதாரண விடுப்பு கழிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட நாளில் ஊழியர் அலுவலகத்திற்கு வர முடியாவிட்டால் முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும் மற்றும் சாதாரண விடுப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
மூத்த அதிகாரிகள் உட்பட அனைத்து ஊழியர்களும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையைப் பயன்படுத்த வேண்டும். அதிகாரிகள் தங்கள் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களின் வருகை மற்றும் நேரமின்மையை கண்காணிப்பார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.