அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு? மத்திய அரசு விளக்கம்!
அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது குறித்து மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
ஓய்வு வயது
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது தற்போது 60 ஆக உள்ளது. இந்நிலையில், இவர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக சமூகவலைதளங்களில் சுற்றறிக்கை ஒன்று பரவியது.
அதில், மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 2 அதிகரிக்கப்பட்டு, 62 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய அரசு விளக்கம்
இந்த தகவல் பரவிய சில மணி நேரத்திற்குள் இது வதந்தி என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்கான பத்திரிகை தகவல் அலுவலகம் தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில்,
सोशल मीडिया पर वायरल हो रहे खबरों में दावा किया जा रहा है कि भारत सरकार ने केंद्रीय कर्मचारियों की रिटायरमेंट आयु में 2 साल की वृद्धि करने का निर्णय लिया है#PIBFactCheck
— PIB Fact Check (@PIBFactCheck) November 19, 2024
❌ यह दावा फर्जी है
✅ भारत सरकार ने ऐसा कोई निर्णय नहीं लिया है
⚠️ बिना सत्यता जांचे खबरें साझा न करें pic.twitter.com/KahXlVIrAF
“மத்திய அரசு பணியாளர்களை ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்தப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. மத்திய அரசு இதுபோன்ற உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை.
உண்மைத்தன்மை இல்லாத ஆதாரமற்ற போலியான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.