இனி.. பென்ஷன் கணவருக்கு இல்லை - குழந்தைகளுக்குத் தான்!

India Department of Pensions
By Sumathi Jan 30, 2024 11:41 AM GMT
Report

பென்ஷன் குறித்த முக்கிய தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பென்ஷன் 

மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை மத்திய சிவில் சர்வீசஸ் ஓய்வூதிய விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது.

govt employee pension

அதன்படி அரசு பெண் ஊழியர்கள் தங்கள் இறப்புக்கு பிறகு கணவருக்கு பதிலாக தனது குழந்தைகளில் தகுதியான ஒருவருக்கு குடும்ப ஓய்வூதியம் அளிப்பதற்காக அவரை வாரிசுதாரராக நியமனம் செய்யலாம். இது குறித்து தங்களின் அரசு துறைத் தலைவரிடம் அவர்கள் எழுத்து மூலமாக எழுதித் தர வேண்டும்.

730 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்- அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கொடுத்த முக்கிய அறிவிப்பு..!

730 நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்- அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு கொடுத்த முக்கிய அறிவிப்பு..!

மத்திய அரசு அறிவிப்பு

விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் பெண் ஊழியர்கள், கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர்ந்த அரசு பெண் ஊழியர்கள் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

pension

பிரதமர் நரேந்திர மோடி அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சட்டபூர்வ உரிமைகளை அளிக்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றி வருகிறார். அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு பெண் ஊழியர் மரணம் அடையும் நிலையில், அவருக்கு தகுதி உள்ள குழந்தைகள் இல்லாவிட்டால், அவருடைய குழந்தைக்கு குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும்.

ஒரு வேளை அவரது குழந்தை மைனராக இருந்தாலோ, மனவளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, பாதுகாவலர் என்ற முறையில் கணவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அந்த குழந்தை உரிய வயதை அடைந்தவுடன் அந்தக் குழந்தைக்கே ஓய்வூதியம் அளிக்கப்படும். உயிரிழந்த பெண் ஊழியரின் குழந்தை தகுதிநிலையை எட்டாவிட்டாலும், குழந்தைகளுக்கே ஓய்வூதியம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.