மக்களே எச்சரிக்கையாக இருங்கள் : அதிகரிக்கும் கொரோனா .. மத்திய அரசு வார்னிங்

COVID-19 COVID-19 Vaccine
By Irumporai Mar 25, 2023 10:40 AM GMT
Report

கொரோனா அளவை கட்டுப்படுத்த மாநிலங்களில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா

தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்தாலும் அதற்கான முறையான பரிசோதனைகள் ஏதும் நடக்கவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர்தெரிவித்துள்ளார். இன்று ஒரு நாள் மட்டுமே கொரோனா பாதிப்பு 1500-ஐ தாண்டியது, இதனால் மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

மக்களே எச்சரிக்கையாக இருங்கள் : அதிகரிக்கும் கொரோனா .. மத்திய அரசு வார்னிங் | Central Govt Advice All States For Covid

மத்திய அரசு எச்சரிக்கை

கொரோனா பாதிப்புள்ளவர்களுக்கு சுவாச பிரச்சனை அதிகம் உள்ளதாகவும் முடிந்த அளவிற்கு சீக்கிரம் அவர்கள் பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தமிழ்நாடு, கேரளா , கர்நாடகா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா அதிகரிப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது.