நீட் தேர்வு விவகாரம்..! தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு

Government of Tamil Nadu Government Of India NEET
By Thahir Jan 19, 2023 06:27 AM GMT
Report

நீட் தேர்வு விவகாரம் குறித்து தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளது.

நீட் தேர்வு குறித்து விளக்கம் கேட்கும் மத்திய அரசு 

சென்றவருடம், தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

நீட் விலக்கு மசோதா குறித்து சென்ற வருடமே மத்திய சுகாதார அமைச்சகம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில், தமிழக மருத்துவத்துறையும் மத்திய அமைச்சகத்திற்கு பதில் அளித்திருந்தது.

central-government-seeks-clarification-on-neet

இதை தொடர்ந்து, ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் நீட் விலக்கு மசோதா குறித்து தமிழக மருத்துவத்துறையிடன் மத்திய அரசு மீண்டும் விளக்கம் கேட்டுள்ளது.

ஆகவே, நீட் விலக்கு மசோதா குறித்து சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து ஒரு சில வாரங்களில் தமிழக அரசு தரப்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்