CAA சட்டத்தை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்?
மீண்டும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த 7ம் தேதி மக்கள் தொகை பதிவேடு ஆன என் ஆர் பி கணக்கெடுப்பை ஒவ்வொரு குடும்பத்திலும் எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் சி ஏ ஏ என்பது கருணையான முற்போக்கான ஒரு சட்டம் என்பதும் இது இந்திய குடிமக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று தெரிவித்திருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களிலும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் சிஏஏ சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன