மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி

By Irumporai Apr 29, 2023 03:12 AM GMT
Report

மெரினா கடற்கரையில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்ததுள்ளது.

  மெரினா பேனா நினைவு சின்னம்

சென்னை மெரினா கடற்கரையில், கடலுக்கு நடுவே மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்க தமிழக பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது . இதற்கான வரைவு படத்தை சென்னை ஐஐடி நிபுணர் குழு தயாரித்துள்ளது.

ஏற்கனவே , கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மத்திய சுற்றுசூழல் வாரியத்தின் அனுமதி கோரி தமிழக பொதுபணித்துறை விண்ணப்பித்து இருந்தது.  

மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி | Central Government Permission To Pen Memorial

  மத்திய அரசு அனுமதி

இந்த நிலையில், மெரினாவில் பேனா சின்னம் அமைக்க மத்திய சுற்று சூழல் வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதில் , மீனவர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட கூடாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது . மேலும், இந்த பேனா சின்னம் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்க முடியும் என்றும், மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் அதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது .

இதற்கடுத்ததாக, மத்திய அரசின் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்திடம் அரசு அனுமதி கேட்டுள்ளது. அவர்களும் அனுமதி அளித்து விட்டால், அடுத்ததாக கட்டுமான பணிகளை துவங்க தமிழக பொதுப்பணித்துறை நடவடிக்கை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது