கட்டுப்பாடுகளை கடுமையாக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்
Tn government
Central government
By Petchi Avudaiappan
கொரோனா மேலும் பரவாமல் இருக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் தொற்று உறுதியான நிலையில் தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். டெல்டா பிளஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்.
டெல்டா ப்ளஸ் நுரையீரலை கடுமையாக பாதித்து எதிர்ப்பு சக்தியை வெகுவாக குறைக்கும் தன்மை கொண்டது
பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.