”மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது” - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

people government bjp chidambaram
By Jon Apr 05, 2021 01:03 PM GMT
Report

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்புகள் மற்றும் மரணங்கள் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. ஏப்ரல் 4-ம் தேதி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில் மத்திய அரசு கொரோனா பரவலை கையாளும் விதத்தை ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ”கொரோனா தொற்று இந்தியாவுக்குள் நுழையும் என்று தெரிந்த பிறகும் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கத் தவறியது. கொரோனா தொற்று பரவலை 21 நாட்களில் நிறுத்தி வெற்றி காண்பேன் என்று பிரதமர் மோடி பேசியதை நாடு மறக்கவில்லை.

”மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது” - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு | Central Government Deceiving People Chidambaram

தட்டுகளைத் தட்டுங்கள், அகல் விளக்கை ஏற்றுங்கள் என்ற வெற்று யோசனைகளச் சொல்லியதையும் மக்கள் மறக்கவில்லை. தொற்றின் பரவல் குறைந்த நேரத்தில் தடுப்பு ஊசி இயக்கத்தை விரைவுபடுத்தாமல் பொன்னான காலத்தை மத்திய அரசு விரயமாக்கியது.

 

தொற்றின் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதை மறுத்து மத்திய அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. தடுப்பூசி இயக்கம் நொண்டி நடக்கும் காட்சி நமக்கு கவலையளிக்கிறது”எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் தற்போது வரை 7 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.