தமிழ்நாட்டில் வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் உயர்வு - மத்திய அரசு பாராட்டு
தமிழ்நாட்டில் வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோம் அதிகரித்துள்ளதால் மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு மத்திய அரசு பாராட்டு
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம், தேசிய சராசரி அளவைவிட கூடுதலாக வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய எரிசக்தி துறை அமைச்சர் ஆர்.கே.சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் தேசிய அளவில் 2018 - 2019 ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் 70 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில்,
2021 - 2022 ஆம் ஆண்டில் அது நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் 53 நிமிடங்களாக இருப்பதாகவும், இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2018 - 2019 ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் 77 நிமிடங்களாக ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மின் விநியோகம்,
தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்
2021 - 2022 ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதை சுட்டுக்காட்டி, தனது பாராட்டினைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாட்டில், மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட ஏதுவாக 24 மணி நேரமும் மின் விநியோகத்தினை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளுக்கும் மத்திய அரசு உதவிடும் என கடித்தத்தில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.