பின் வாங்கிய மத்திய அரசு..! தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக அறிவிப்பு

Government Of India
By Thahir Apr 08, 2023 07:31 AM GMT
Report

தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது.

நிலகரி திட்டத்திற்கு எதிர்ப்பு 

தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமான தஞ்சையை சுற்றியுள்ள வடசேரி, மகாதேவப்பட்டணம், உள்ளிக்கோட்டை, குப்பச்சிக் கோட்டை, பரவன்கோட்டை, கீழ்க்குறிச்சி, அண்டமி, நெம்மேரி, கொடியாளம், கருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு திட்டமிட்டிருந்தது.

The central government abandoned the plan to take coal

மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு எழுந்தது.

இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலன் காக்க, நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்துகிறேன் என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

முதலமைச்சர் அதிரடி முடிவு 

இதனை தொடர்ந்து புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் திமுகவின் மன்னார்குடி எம் எல்ஏ டிஆர்பி ராஜா மற்றும் அதிமுகவின் அருண்மொழி தேவன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில்,

The central government abandoned the plan to take coal

மத்திய அரசின் நிலக்கரி சுரங்கங்களுக்கு எக்காரணம் கொண்டும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என முதலமைச்சர் தெரிவித்து இருந்தார்.

திட்டத்தை கைவிட்ட மத்திய அரசு 

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காவிரி டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதை தவிர்க்குமாறு, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியிடம் வலியுறுத்தி இருந்தார்.

இதனை தொடர்ந்து, தமிழகத்தில், டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மத்திய அமைச்சர் திரு.பிரகலாத் ஜோஷி அவர்கள் நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அறிவிக்கப்பட்டிருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், தமிழக விவசாயிகள் மற்றும் பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.