யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம்?- மத்திய அரசு ஆலோசனை

Money paytm
By Yashini Jul 18, 2026 06:10 AM GMT
Report

பெரிய வணிக நிறுவனங்களுக்கான யுபிஐ பரிவர்த்தனை கட்டணத்தை மீண்டும் அமல்படுத்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

யுபிஐ பரிவர்த்தனை கட்டணம்

2020ஆம் ஆண்டு ஜனவரி முதல் Google Pay, PhonePe, Paytm உள்ளிட்ட செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

இந்நிலையில், பெரிய வணிக நிறுவனங்களின் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டும் மீண்டும் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம்?- மத்திய அரசு ஆலோசனை | Central Gov In Discussion To Bring Back Upi Charge

ஆண்டுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை வருவாய் ஈட்டும் வணிகர்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இந்தக் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும், ரூ. 2000க்கும் அதிகமான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்தக் கட்டணம் வசூலிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சிறு கடைக்காரர்கள், தெருவோர வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ளும் தனிப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு கட்டணமும் விதிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது.

யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மீண்டும் கட்டணம்?- மத்திய அரசு ஆலோசனை | Central Gov In Discussion To Bring Back Upi Charge

2016- 17ஆம் நிதியாண்டில் 2 கோடியாக இருந்த யுபிஐ பரிவர்த்தனைகள், 2025- 26ஆம் நிதியாண்டில் சுமார் 24,200 கோடியாக அதிகரித்துள்ளன.

இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.