ஏப்ரல் 14-இல் நாடாளுமன்ற தேர்தலா..?
வரும் நாடாளுமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
10 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் பாஜகவிற்கும், மீண்டும் ஆட்சியை பிடித்திட வேண்டும் என முற்படும் காங்கிரஸ் மற்றும் பாஜகவை நீக்கவேண்டும் என தீவிரமாக வேலை செய்து வரும் எதிர்க்கட்சிகளுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவமான ஒன்றாகும்.
மோடியை முன்வைத்து தேர்தலை சந்திக்கும் பாஜக, தீவிர பிரச்சாரங்களை துவங்கி நீண்ட காலமாகிவிட்டது. அதனை எதிர்த்து காங்கிரஸ், பல மாநிலங்களின் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து மாபெரும் "இந்தியா" கூட்டணியை கடமைத்துள்ளது.
ஏப்ரல் 16-இல்....
இன்னும் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிப்பதில் சிக்கல் நீடித்து வந்தாலும், தற்போதைய சமயத்தில் இரண்டு தரப்பும் சமமான பலத்தில் தான் நீடிக்கின்றன. இந்நிலையில், தேர்தல் எப்போது என்ற கேள்விகளும் அதிகளவில் எழுந்துள்ளது.
இச்சூழலில், ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஏற்றவாறு தேர்தல் பணிகளை வகுக்குமாறு தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் இதற்கான வரைவுத் திட்டத்தையும்வழங்கியிருக்கின்றது.