NEET = 0..!! ஒப்புக்கொண்ட மத்திய அரசு..முதல்வர் முக ஸ்டாலின் விளாசல்...!

M K Stalin Tamil nadu DMK Narendra Modi NEET
By Karthick Sep 21, 2023 05:33 AM GMT
Report

முதுகலை மருத்துவ படிப்பிற்கான கட்ஆப்பை ஜீரோவாக மத்திய அரசு குறைந்துள்ள நிலையில், அதனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

NEET = 0

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நீட் தேர்வின் PG கட்-ஆப்பை பூஜ்ஜியமாகக் குறைப்பதன் மூலம், தேசிய 'தகுதி' மற்றும் நுழைவுத் தேர்வில் 'தகுதி' என்பது அர்த்தமற்றது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என குறிப்பிட்டு, இது பயிற்சி மையங்கள் மற்றும் தேர்வுக்கு பணம் செலுத்துவது பற்றியது என கண்டிதிருக்கிறார்.

central-accepts-neet-is-zero-mkstalin-slams

நீட் பூஜ்யத்திற்கு சமமானது என்றும் நீட்டிற்கும் தகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கண்டனம் தெரிவித்துள்ள அவர், இதை நாம் காலம் காலமாக சொல்லி வருகிறோம் என குறிப்பிட்டு, இது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது என்றும் உண்மையான தகுதிக்கான அளவுகோல்கள் எதுவும் இல்லை என தனது பதிவில் தெரிவித்தார்.

பாஜக அரசை அகற்ற வேண்டும்

விலைமதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத மத்திய பாஜக அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது என சுட்டிக்காட்டி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ள முதல்வர் முக ஸ்டாலின், நீட் மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பாஜக அரசை அகற்ற வேண்டும் என்றும் தனது பதிவில் கேட்டுக்கொண்டார்.

நேற்று மருத்துவ முதுகலை படிப்பிற்கான கட் - ஆப் மதிப்பெண்ணை பூஜ்யமாக குறைத்து அறிவிப்பு வெளியான நிலையில், பல எதிர்க்கட்சிகளும் இந்த தேர்விற்கான பல என்ன என சரமாரியான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.