திருப்பதி கோயிலில் தொடரும் சர்ச்சை - அன்னதான உணவில் இருந்த பூரான்
திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட அன்னதான உணவில் பூரான் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி லட்டு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இந்த குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் பின் லட்டில் கலப்படம் செய்யப்பததற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லாத போது இதை மாநில முதல்வர் பொது வெளியில் பேசியது ஏன் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
உணவில் பூரான்
இந்த லட்டு சர்ச்சையே ஓயாத நிலையில் திருப்பதியில் அன்னதானமாக வழங்கப்படும் உணவில் பூரான் ஒன்று இருந்துள்ளது. தெலங்கானா மாநிலம் வாரங்கல் சேர்ந்த சந்து எனும் பக்தர் தனது நண்பர்களுடன் மலைப்பாதையில் பாத யாத்திரையாக திருமலைக்கு நடந்து வந்தனர்.
இவர்கள் அன்னதான கூடத்தில் சாப்பிட்ட தயிர் சாதத்தில் பூரான் ஒன்று இருந்துள்ளது. அதுகுறித்து அங்கிருந்த தேவஸ்தான ஊழியர்களிடம் காண்பித்து முறையிட்ட போது, சரியாக பதிலளிக்காமல் பக்தர்களை அங்கிருந்து வெளியேறும்படியும் கூறியுள்ளனர்.
తిరుమలలో అపచారం!!!
— MBYSJTrends ™ (@MBYSJTrends) October 5, 2024
తిరుమలలో అన్నదాన కేంద్రంలో పెరుగు అన్నంలో జెర్రి
టిటిడి మాధవ నిలయం అన్నదాన కేంద్రంలో భోజనం చేస్తున్న భక్తుని ఆకులో జెర్రి
అన్నప్రసాదంలో జెర్రి కనపడటంపై టిటిడి యాజమాన్యాన్ని ప్రశ్నించిన భక్తలు pic.twitter.com/x9vmrkD2Wi
திருப்பதியில் இன்று காலை அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சமையற் கூடத்தை திறந்து வைத்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கூறிய நிலையில் உணவில் பூரான் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.