பெரியவர் இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் - முதலமைச்சர் அறிவிப்பு
பெரியவர் இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இளையபெருமாளுக்கு நுாற்றாண்டு விழா
தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.
அப்போது, தீண்டாமை ஒழிப்பதற்காக போரடியாக இளையபெருமாளின் நூற்றாண்டு விழா குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், இளையபெருமாள் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்.
இளையபெருமாள் முயற்சியால் தான் சிதம்பரத்தில் இரட்டை பானை முறை முடிவுக்கு வந்தது. பெரியவர் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு விழா குறித்து 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருபது ஆண்டுகளும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றியவர் இளையபெருமாள்.
மிகப்பெரிய சமூக போராட்டத்தை திகழ்தியவர் அவர். தீண்டாமையை ஒழிக்க சாதி அமைப்பின் ஆணிவேரை வெட்ட வேண்டும்.
சிதம்பரத்தில் நினைவரங்கம்
அதற்கு சாதிய அமைப்பின் பிடிப்பை உடைத்தாக வேண்டும் என்ற பெரியவர் இளையபெருமாள் வழியில் சுயமரியாதைச் சமதர்ம சமூகத்தை அமைப்போம்.
பிற்காலத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்திற்கு அடித்தளமாக இருந்தது இளையபெருமாள் அறிக்கைதான். பெரியவர் இளையபெருமாளுக்கு கடலூர் சிதம்பரத்தில் நூற்றாண்டு நினைவரங்கம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கு வரவேற்பு அளித்தனர்.