தமிழகத்தில் ஜூலை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்
கொரோனா தொற்று காரணமாக 2021ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிப்போனது.
இந்நிலையில், தற்போது 2027ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.

முதற்கட்டமாக ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் வரை வீடுகளின் பட்டியல் தயாரித்தல் மற்றும் வீடுகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் பணிகள் நடைபெறும்.
இதனைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும். இந்த முறை முழுவதும் டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடைபெறும்.
நாடு முழுவதும் சுமார் 32 லட்சம் அரசு அலுவலர்கள் இந்த பணிகளில் ஈடுபட உள்ளனர்.

தமிழகத்தில் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜூலை 17ஆம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அரசிதழில் அறிவித்துள்ளது.
இந்த பணிகள் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 30 வரை 45 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் வீட்டு நிலை, வசதிகள், சொத்துக்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து 33 கேள்விகள் கேட்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு விற்கப்பட்ட சலேவின் சித்திரவதை காட்சிகள்! கம்மன்பில பெரும் குற்றச்சாட்டு IBC Tamil
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan