நானியின் படத்தைப் பார்த்து கண்கலங்கிய சென்சார் அதிகாரிகள்
நடிகர் நானி படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் கண்ணீர் மல்க பாராட்டு தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நானி தற்போது ராகுல் சங்கரித்யன் இயக்கத்தில் சாய்பல்லவி,கீர்த்தி ஷெட்டி நாயகிகளாக நடித்துள்ள ஷ்யாம் சிங்ஹா ராய் படத்தில் நடித்துள்ளார். ராகுல் சங்கரித்யன் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற TAXIWALAA படத்தை இயக்கியவர்.
இதனிடையே ஷ்யாம் சிங்ஹா ராய் படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 24 திரைக்கு வரவுள்ளதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தை சமீபத்தில் சென்சார் அதிகாரிகள் பார்வையிட்டனர். படத்தை பார்த்துவிட்டு U /A சான்றிதழ் அளித்தனர். சான்றிதழ் அளித்ததோடு மட்டுமில்லாமல் படம் முடிந்தவுடன் எழுந்து நின்று கண்ணீர்விட்டு பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படம் ரசிகர்களுக்கு எந்த ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தாத வகையில் ஒரு புது அனுபவமாக இருக்கும் என்றும் படத்தை சென்சார் அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.