கூட்டணி என்பது துண்டு போல.. தேவையில்லை என்றால் கழட்டி வைத்து கொள்ளலாம் : செல்லூர் ராஜூ

admk pmk Sellur Raju
By Irumporai Sep 15, 2021 06:07 AM GMT
Report

கூட்டணி என்பது தோலில் போடும் துண்டு மாதிரி, துண்டை தேவையென்றால் தோலில் போட்டு கொள்ளலாம் எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ என தெரிவித்தார்.

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

கூட்டணி என்பது துண்டு  போல.. தேவையில்லை என்றால் கழட்டி வைத்து கொள்ளலாம் :  செல்லூர் ராஜூ | Cellur Raju Pmk Admk

இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ செல்லூர் ராஜூ:  கூட்டணி என்பது தோலில் போடும் துண்டு மாதிரி, துண்டை தேவையென்றால் தோலில் போட்டு கொள்ளலாம். துண்டு தேவையில்லை என்றால் கழட்டி வைத்து கொள்ளலாம். எனக் கூறினார்.

மேலும், அதிமுக கூட்டணியை நம்பி இருந்ததில்லை. கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில்தான் எடுபடும். பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை என தெரிவித்தார்.