மக்களே உஷார்! சார்ஜ் போட்டபடி போனில் பேசிய இளம் பெண்; அடுத்த நொடியே நேர்ந்த சோகம்!

Tamil nadu Thanjavur Death
By Jiyath Sep 28, 2023 04:10 AM GMT
Report

சார்ஜ் போட்டபடி பேசிய இளம் பெண் செல்போன் வெடித்து தீயில் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வெடித்த செல்போன்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே விசித்திரராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கோகிலா (33). இவரின் கணவர் உடல் நலக் குறைவால் சில வருடங்களுக்கு முன்பு இறந்துள்ளார். கோகிலாவிற்கு 9 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

மக்களே உஷார்! சார்ஜ் போட்டபடி போனில் பேசிய இளம் பெண்; அடுத்த நொடியே நேர்ந்த சோகம்! | Cellphone Crash And Tanjore Women Died In Fire I

இவர் வாட்ச் மற்றும் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வந்தார். கோகிலா நேற்று கடையில் செல்போனுக்கு சார்ஜ் போட்டபடி ஹெட்போனை காதில் மாட்டிக்கொண்டு நீண்ட நேரம் போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென செல்போன் வெடித்து தீ பிடித்துள்ளது. பற்றிய தீ மளமளவென கடை முழுவதும் பரவியதுடன் கோகிலா உடலிலும் பற்றியுள்ளது.

பெண் பலி

இதில் கோகிலா உடல் முழுவதும் தீப்பிடித்து கடையிலேயே தீயில் கருகி உயிரிழந்துள்ளார். அத்துடன் கடைக்குள் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

மக்களே உஷார்! சார்ஜ் போட்டபடி போனில் பேசிய இளம் பெண்; அடுத்த நொடியே நேர்ந்த சோகம்! | Cellphone Crash And Tanjore Women Died In Fire I

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.