பாத்ரூமை விட செல்போனில்தான் அதிக பாக்டீரியாவாம்.. ஷாக் தகவல்!
கழிவறைகளை விட செல்போன்களில் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சி அறிக்கை வெளியாகியுள்ளது.
செல்போன் பயன்பாடு
மனிதர்களையும், செல்போனையும் பிரிக்கமுடியாத அளவுக்கு நவீனம் ஒன்றிபோயுள்ளது. எது இல்லாமலும் இருந்துவிடலாம், ஆனால் செல்போன் இல்லாமல் இருக்கமுடியாது எனும் நிலையே நீடித்து வருகிறது.
அத்தகைய வகையில், சமையலறை, கழிவறை, அலுவலகம் என செல்லும் இடமெல்லாம் செல்போனை எடுத்துச் சென்று பயன்படுத்துகிறோம். இப்படி இருக்கையில் எப்படி அது நம்மை விட்டுவைக்கும். அதன் அடிப்படையில்,
அதிர்ச்சி தகவல்
கழிவறை இருக்கையை விட 10 சதவீத பக்டீரியா அதிகளவில் நாம் உபயோகிக்கும் செல்போனில் காணப்படுகிறதாம். இதை உறுதிப்படுத்தியுள்ள அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இளம் வயதினரின் மொபைலில் குறைந்தது
17 ஆயிரம் பாக்டீரியாக்கள் இருப்பதாகவும், இது சாதாரண கழிப்பறை இருக்கையை விட 10 மடங்கு அதிகம் என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.