‘‘செல்போனில் இளம் பெண்கள் பேசுவதை கண்காணிக்கணும் ’’ சர்ச்சையில் சிக்கிய பெண்கள் ஆணைய உறுப்பினர்

controversial meenakumari
By Irumporai Jun 10, 2021 05:06 PM GMT
Report

உத்தர பிரதேச மாநிலத்தின் பெண்கள் ஆணைய உறுப்பினரான மீனா குமாரி, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது இளம்பெண்கள் செல்போனில் பேசுவதை கண்காணிக்க வேண்டும். அவர்கள் செல்போனை ஆண்களுடன் பேசுவதற்கும், அவர்களுடன் ஓடிப்போவதற்கும் அதனை பயன்படுத்துகிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், மகள்கள் கவனக்குறைவாக இருப்பதற்கு தாய்தான் பொறுப்பு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பெண்களே காரணம் என்பது போல அமைந்துள்ளது அவரின் பேச்சு. அதுவும் ஆணையத்தின் உறுப்பினரே இவ்வாறு பேசியது சர்ச்சையாகியுள்ளது.