#Live செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நடிகர் ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு..!
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றும் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
ஒலிம்பியாட் போட்டி துவக்கம்
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்டு மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஆசியாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகும், இந்தியாவில் முதல் முறையாகவும் நடைபெறுகிறது. இந்த 44-வது செஸ் போட்டியில் 187 நாடுகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தான் அதிக வீரர்கள் பங்கேற்க உள்ளனர். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்று வருகிறது.
பிரபலங்கள் பங்கேற்பு

இதன் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கியுள்ளது. நிகழ்ச்சியின் முதலாவதாக தமிழகத்தின் பெருமையை உணர்த்தும் வகையிலும், செஸ் ஒலிம்பியாட்டின் விளையாட்டை உணர்த்தும் வகையில் சாகர் பட்டேல் கைகளை கொண்டு மணலில் ஓவியங்களை வரைந்து வருகிறார்.
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வைரமுத்து, கார்த்தி, துர்கா ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதால் சென்னையில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.