நடிகர் தனுஷ் மீது ஆத்திரத்தில் இருக்கும் பிரபல நிறுவனம் - விடாமல் பின்தொடரும் பிரச்சனைகள்!

Dhanush Actor Angry Aishwarya Maaran Hotstar ஐஸ்வர்யா நடிகர்தனுஷ்
By Thahir Apr 06, 2022 06:37 AM GMT
Report

நடிகர் தனுஷ் மீது பிரபல நிறுவனமான ஹாட் ஸ்டார் கடும் ஆத்திரத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்ததில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் உருவான மாறன் திரைப்படம் OTT-யில் வெளியானது. படக்குழுவினர் எதிர்பார்த்த வெற்றியை மாறன் திரைப்படம் தரவில்லை.

இந்நிலையில் மாறன் திரைப்படம் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. பிரபல OTTநிறுவனமான ஹாட் ஸ்டார் நடிகர் தனுஷ் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அத்ராங்கி ரே மற்றும் மாறன் உள்ளிட்ட திரைப்படங்களை ஹாட் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டது.

ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை,தனுஷ் நடித்த திரைப்படம் என்பதால் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தது.

ஆனால் அந்த நம்பிக்கையை இந்த திரைப்படங்கள் தவிடுபொடியாக்கியுள்ளன. படங்கள் ஓடாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து இனி வரும் காலங்களில் பாடத்தை திரையில் பார்த்த பின்பு தான் வெளியிட வேண்டும் என ஹாட் ஸ்டார் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.