யாருக்கு சார் வயசாயிடுச்சு : இணையத்தை ஆக்கிரமித்த தல தோனி

dhoni csk thaladhoni CSKvDC ipd2021
By Irumporai Oct 10, 2021 07:03 PM GMT
Report

துபாயில் நடைபெற்ற ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான குவாலிபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

போட்டியின் போது கடைசியில் களம் கண்ட தல தோனி 6 பந்தில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்து வெற்றி பெறவைத்தார்.

இந்த நிலையில் சென்னை அணியின் வெற்றிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் தல தோனியின் இந்த வெற்றியை பாராட்டி இந்திய அணியின் கேப்டனும், பெங்களூர் அணியின் கேப்டனுமாகிய விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், :

கிங் இஸ் பேக் எப்போதும் மிகச்சிறந்த பினிஷரின் ஆட்டம். என்னை சீட்டின் நுனியில் இருந்து இன்று இரவு மீண்டும் ஒருமுறை துள்ளிக்குதிக்க வைத்து விட்டீர்கள்."

என கேப்டன்  கோலி பாராட்டியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில்:

"ஓம் பினிஷாய நமஹ, சென்னைக்கு சிறப்பான வெற்றி. ருதுராஜ் டாப் கிளாஸ், உத்தப்பா கிளாசி, தோனியின் முக்கியத்துவம். சிறந்த வெற்றி.என்று பாராட்டியுள்ளார்.

    நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில்;

நம்பர் 7அதுதான்  என்று தோனியை பாராட்டி பதிவிட்டுள்ளார்.


நடிகையும் பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் சென்னைக்கு ஒரு ஓ போடு என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், "ஒரு முறை சிங்கம் என்றால் எப்போதும் சிங்கம்தான்" என்று தோனியின் புகைப்படத்தை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.   


அதே போல் கடந்த சில நாட்களாக தோனியின் ஆட்டம் சரியில்லை அவருக்கு வயசாயிட்டுச்சு என சிலர் இணையத்தில் விமர்சித்து வந்த நிலையில் தற்போது தோனியின் சிறப்பான ஆட்டத்திறமையினை வைத்து யாருக்கு சார் வயசாயிடுச்சு தலடா என தோனி ரசிகர்கள் இணையத்தில்  புகழ்ந்து வருகின்றனர்.

யாருக்கு சார் வயசாயிடுச்சு : இணையத்தை ஆக்கிரமித்த தல தோனி | Celebrities Tweet Dhoni For Reach To Ipl Final

தோனிய ரசிகர்கள் இவ்வுளவு தூரம் தலையில் தூக்கி வைத்து கொண்டாட காரணம் என்ன? காரணம் இதுதான்:

சுருக்கமா சொல்லணும்ணா, சந்திரமுகி படத்துல, வடிவேலு பின்னியிருப்பார், ஜோதிகா கலக்கியிருப்பார் இன்னம் சொல்லப்போனால், அவர் தான் படத்தின் கரு என்றே கூறாலம் ஆனால் படத்தில் டாக்டர் வேடத்தில் வந்த சூப்பர் ஸ்டார்,  ஒரே பாட்டுல 'லக்க லக்கன்னு' எல்லாத்தையும் தட்டி தூக்கியிருப்பார்

அதே மாதிரிதான் லீக்ல-லாம் பால மீட் பண்ணவே கஷ்டப்பட்டதாக  விமர்சிக்கப்பட்ட தோனி, ப்ளே ஆப்ல, சிக்ஸ், போர்னு அடிச்சி டீம பைனலுக்கு கொண்டு போய் மொத்தமா எல்லாத்தையும் தட்டிட்டு போய்ட்டார்.  சூப்பர் ஸ்டார்.. சூப்பர் ஸ்டார் தான்.  அதே போல கிரிகெட்ல தலன்னா அது தோனி தான்.