‘கொரோனா முடியல... பண்டிகை வேற வருது’ - புலம்பும் மத்திய அரசு

central government secondcovidwave festival season in india
By Petchi Avudaiappan Aug 26, 2021 09:53 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report

கொரோனா தொற்றை எதிா்கொள்வதில் செப்டம்பா், அக்டோபா் மாதங்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா 2வது அலை மத்திய, மாநில அரசுகளின் பெரும் முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.

இதனிடையே இந்தியாவில் செப்டம்பர் முதல் நவம்பர் வரை பல்வேறு விதமான பண்டிகைகள் கொண்டாடப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு பண்டிகைகள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கொண்டாடப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத்துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது கொரோனா இரண்டாவது அலையின் மத்தியில்தான் நாடு இருப்பதாகவும், தொற்று பாதிப்பு இன்னமும் முடியவில்லை என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த காலங்களில் பண்டிகை கொண்டாடப்படும் போது அதிகரித்த நோய் பாதிப்புகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் கொண்டுள்ளார்.