தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று சென்னை வருகை
Tamil nadu
Election
By Yashini
தமிழகத்தில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து கட்சிகள் தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று சென்னை வருகிறார்.

இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெறும் தேர்தல் தயாரிப்புகளை ஆய்வு செய்ய அவர் வருகிறார்.
மேலும், தேர்தல் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் அவர் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு விற்கப்பட்ட சலேவின் சித்திரவதை காட்சிகள்! கம்மன்பில பெரும் குற்றச்சாட்டு IBC Tamil