திருவள்ளுவருக்கு சாதி அடையாளமா? டிடிவி தினகரன் கண்டனம்

election sasikala poet
By Jon Feb 27, 2021 12:44 PM GMT
Report

திருவள்ளுவர் தொடர்பான சர்ச்சைகள் சமீப காலங்களாக தமிழ்நாட்டில் அதிக அளவில் உருவாகி வருகிறது. திருவள்ளுவருக்கு பாஜக காவி சாயம் பூசுவதாகவும் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் சிபிஎஸ்சி பாடப் புத்தகம் ஒன்றில் திருவள்ளுவருக்கு சாதிய அடையாளம் கொடுக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையாக எழுந்துள்ளது.

இதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

''சிபிஎஸ்இ எட்டாம் வகுப்பு இந்தி பாடப்புத்தகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதிய அடையாளத்துடன் திருவள்ளுவரை வரைந்திருப்பது கண்டனத்திற்குரியது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என உலகப் பொதுமறை தந்த வள்ளுவரை, மாணவச் செல்வங்களுக்கு இப்படி தவறாக கற்பிப்பதை ஏற்க முடியாது.

அந்தப் படத்தை பாடப்புத்தகத்தில் இருந்து நீக்குவதுடன், இனி இத்தகைய தவறுகள் நிகழாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை CBSE மேற்கொள்ள வேண்டும். '' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.