CBSE +2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..!

India
By Thahir Jul 22, 2022 09:10 AM GMT
Report

சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகியுள்ளன.இன்று பிற்பகல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

CBSE தேர்வு முடிவுகள் வெளியீடு 

2021-22-ம் கல்வியாண்டில் நடைபெற்ற சிபிஎஸ்இ பொதுத்தேர்வின் முடிவுகளை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட கால தாமதம் ஆன நிலையில் கடந்த 4ம் தேதி சிபிஎஸ்இ பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை.

இதையடுத்து தேர்வு முடிவை ஆவலாக எதிர்பாத்திருந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிபிஎஸ்இ பள்ளிகளிடம் இருந்து பொதுத்தேர்வு முடிவுகளை சேகரிப்பதால் முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

CBSE +2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு..! | Cbse Plus 2 10 Th Exam Result Publised

மிக விரைவில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை சிபிஎஸ்இ பிளஸ் 2க்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.

இதில் மொத்தம் 92.71 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்வு முடிவை results.cbse.nic.in அல்லது parikshasangam.cbse.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

அதே போன்று 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 94 சதவீத மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்