சிபிஎஸ்இ ப்ளஸ் 2 மதிப்பெண் வெளியீடு எப்போது? - வெளியான புதிய தகவல்

சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை பள்ளிகள் இறுதி செய்து அனுப்ப மேலும் 3 நாள்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த கல்வியாண்டில் சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. அதேசமயம் 10,11,12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முடிவுகளை ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதனிடையே ஜூலை 22 ஆம் தேதிக்குள் 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை இறுதிசெய்து அனுப்பிடுமாறு, பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. அந்த காலக்கெடுவை மேலும் 3 நாள்களுக்கு நீட்டித்துள்ள சிபிஎஸ்இ, ஜூலை 25 ஆம் தேதிக்குள் மதிப்பெண் பட்டியலை இறுதிசெய்து அனுப்பிட பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் சிபிஎஸ்இ தனித் தேர்வர்களுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்