“பெண் குழந்தைகளை இழிவுப்படுத்தும் கருத்துகளுக்கு சி.பி.எஸ்.இ வருத்தம் தெரிவிக்க வேண்டும்” - டிடிவி தினகரன்

controversy cbse english exam qtn paper ttv dhinakaran
By Swetha Subash Dec 13, 2021 12:09 PM GMT
Swetha Subash

Swetha Subash

in இந்தியா
Report

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் பெற்றுள்ள பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையிலான பிற்போக்குத்தனமான கருத்துக்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன்தினம் ஆங்கில தேர்வு நடைபெற்றிருந்த நிலையில் அதில் குடும்ப ஒழுக்கம் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள சில கேள்விகள் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அதில் இல்வாழ்க்கையில் மனைவிமார்கள் வலுப்பெறுவதினால் பெற்றோர் என்ற கட்டமைப்பு வலுவிழந்து போகிறது என்றும் முன்பெல்லாம் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்த நிலையில் தற்போது அவ்வாறு இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும், இதனால் அதைப் பார்க்கும் குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணியாளர்களிடம் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாகவும், குழந்தைகளின் ஒழுங்கீனத்திற்கு யார் காரணம்?

வீட்டில் ஒழுக்கம் சீர்கெட என்ன காரணம், வீட்டில் குழந்தைகள் பணியாளர்களுக்கான இடம், குழந்தைகள் உளவியல் எனக் கேட்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ அமைப்பின் இந்த கேள்விகள் மிகப் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ அமைப்பின் இந்த வினாக்கள் பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதாக்கக் கூறி இதற்கு நாடு முழுவதும் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதற்குக் கண்டம் தெரிவித்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுவதைத் தடுக்க சிபிஎஸ்இ நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.