CBSE 12th - தேர்வு முடிவுகள் வெளியானது : சென்னையின் தேர்ச்சி சதவீதம் எவ்வுளவு தெரியுமா?
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு வாரியத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 98.83% தேர்ச்சி சதவீத்துடன் திருவனந்தபுரம் முதல் இடத்தையும், 98.16% சதவீதத்துடன் பெங்களூரு இரண்டாம் இடத்தையும், 97.79 தேர்ச்சி விகிதத்துடன் சென்னை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு
ஒட்டு மொத்தமாக 14,35,366 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 13,30,662 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாகும்.
சிபிஎஸ்இ வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம். இதற்கான இணையதளம் cbse.nic.in , cbseresults.nic.in ஆகும். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இரண்டு கட்டமாக தேர்வு
கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, 2020-21 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு கட்டங்களாக சிபிஎஸ்இ தேர்வு நடத்தியது.
முதல் கட்ட அமரவில் 50% பாடத்திட்டங்களில் இருந்து கொள்குறிவகை வினா விடை (MCQ) மூலம் மாணவர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர்.
அதற்கான தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய இரண்டாவது அமர்வு எழுத்துத் தேர்வாக நடைபெற்றது. இதில், புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருந்தன.