சி.பி.எஸ்.சி 10-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து, 12-ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் தினம்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்று உச்சபட்சமாக 1,80,000ற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளும், ஆயிரம் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இதனால் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.
ஆனால் மத்திய அரசின் கீழ் இயங்கும் சிபிஎஸ்சி பள்ளிகளில் தேர்வுகளை நடத்துவதற்கான அட்டவனை வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சிபிஎஸ்சி பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில் தற்போது 10-ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்சி பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது,