பாஜகவின் ஊதுகுழலா சீமான் ? கொந்தளித்த சிபிஎம் கே.பாலகிருஷ்ணன்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில நாட்களாகவே சர்ச்சையான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். அண்மையில் விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால் நூறு நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்றார். பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டது.
இந்த நிலையில் , இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் சைவம் மதத்திற்கு திரும்ப வேண்டும் என சொல்ல சீமான் ஆர்எஸ்எஸ் க்கு ஆதரவாக செயல்படுகின்றாரா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
ஏனென்றால் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் பாஜகவினரும் இப்படி தான் மதம் மாற சொல்கிறார்கள்; அதே கருத்தை தான் சீமானும் முன்வைக்கிறார். அப்போது அவர்களுக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு என்ன என கேள்வியெழுப்பினர்.
இந்த நிலையில், சீமானை பாஜகவின் ஊதுகுழல் என சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன் சீமான் பாஜகவின் ஊதுகுழலாக மாறிவிட்டார். தமிழா, திராவிடமா எனும் விவாதத்தை எழுப்பியபோதும் சரி 100 நாள் வேலை திட்டம் குறித்து கூறியதும் சரி இவை எல்லாம் மத்திய அரசின் செயல்களுக்கு மறைமுகமாக வக்காலத்து வாங்கும் செயல் தான்.
ஊழல் செய்பவர்கள் நிச்சயம் தண்டனைக்குரியவர்கள், மேலும் அதிமுக ஆட்சியிலேயே சில அமைச்சர்களின் வீடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. ஆகவே திமுக அரசு செய்வதில் எந்த தவறும் இல்லை. தவறு செய்தால் தண்டனை அனுபவிப்பார்கள்” என்றார்.