கரூர் விவகாரம் - விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன்
கரூர் விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்க கோரி, விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
விஜய்க்கு சிபிஐ சம்மன்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தவெக தரப்பில் சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

ஏற்கனவே விசாரணையை தொடங்கியுள்ள சிபிஐ, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், தவெக நிர்வாகிகள் உட்பட 200க்கும் அதிகமானோரை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் வரும் ஜனவரி 12 ஆம் தேதி, டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.