கரூர் வழக்கு விசாரணை - விஜய்யின் கோரிக்கையை நிராகரித்த சிபிஐ

Vijay Delhi Central Bureau of Investigation Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Mar 10, 2026 02:18 PM GMT
Report

 கரூர் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் தவெக தலைவர் விஜய்யின் கோரிக்கையை சிபிஐ நிராகரித்துள்ளது.

விஜய்க்கு சிபிஐ சம்மன்

கரூரில், தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.

ஏற்கனேவே இருமுறை, இது தொடர்பாக தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி டெல்லி வரவழைத்து விசாரித்தது. 

கரூர் வழக்கு விசாரணை - விஜய்யின் கோரிக்கையை நிராகரித்த சிபிஐ | Cbi Reject Tvk Vijay Request New Summon To March15

தற்போது, மீண்டும் இன்று(மார்ச்10) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக கோரி நேற்று சம்மன் அனுப்பியது. 

விஜய்யை எதிர்த்த ரஞ்சனா நாச்சியார்: யார் தெரியுமா?

விஜய்யை எதிர்த்த ரஞ்சனா நாச்சியார்: யார் தெரியுமா?

கோரிக்கை நிராகரிப்பு

ஆனால், வேட்பாளர் தேர்வு நேர்காணல் உள்ளிட்ட பல்வேறு திட்டமிடப்பட்ட நிகழ்வுகள் உள்ளதால், 15 நாள் அவகாசம் மற்றும் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக விஜய் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. 

கரூர் வழக்கு விசாரணை - விஜய்யின் கோரிக்கையை நிராகரித்த சிபிஐ | Cbi Reject Tvk Vijay Request New Summon To March15

ஆனால், இந்த கோரிக்கையை நிராகரித்துள்ள சிபிஐ, வரும் மார்ச் 15 ஆம் திகதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில், தவெக சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் தவெக தலைவர் விஜய் நேர்காணல் நடத்தினார்.

விருப்பமனு கொடுத்தவர்களிடம் விஜய் இன்று நேர்காணல்

விருப்பமனு கொடுத்தவர்களிடம் விஜய் இன்று நேர்காணல்

இதனிடையே கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணைக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் வரும் மார்ச் 17 ஆம் திகதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.