சிறார் ஆபாச படங்கள் இணையத்தில் பதிவேற்றம் : தமிழகம் உள்பட 14 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை
சிறாருக்கு பாலியல் தொந்தரவு அளித்து அவர்கள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை இணைய தளங்களில் பதிவேற்றியது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் சிறார்களை குறிவைத்து இணைய தளங்களில் ஆபாச படங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. நேற்று முன்தினம் பதிவான இந்த வழக்குகளில் மொத்தம் 83 பேரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் தமிழகம் உள்பட 14 மாநிலங்களில் இன்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
ஆந்திரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஒடிசா, தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், அரியானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், திருவள்ளூர், சேலம், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் நடந்த ஆய்வில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரத்தில் சிக்கியது யார் யார் என்கிற விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.