சிபிஐ விசாரணை நிறைவு - விஜய்யிடம் பெயர் கேட்ட அதிகாரிகள்
சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் அதிகாரிகள் விசாரணை நிறைவு பெற்றது.
சிபிஐ விசாரணை
கரூர் பெருந்துயரம் தொடர்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், விஜய் அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் முதலில் கேட்ட கேள்வி உங்கள் பெயர் என்ன. பின் சிபிஐ அதிகாரிகள் கேட்கும் கேள்விகள் புரியவில்லை என்றால் அதை விளக்குவதற்கும் அதை தவறில்லாமல் எழுதுவதற்கும் சிபிஐ அதிகாரிகள் ஸ்டேனோகிராபரை கொடுத்துள்ளனர்.
நிறைவு
கேள்வி வினாத்தாள் போன்ற சிறிய புத்தகத்தை தயார் செய்து வைத்து அதை விஜய்யிடம் கொடுத்து விடைகளை பெற்றனர். இந்த விசாரணைக்கு ஐஜி நிர்மல் குமார், ஜோஷி ஆகியோரும் டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.
திகார் சிறையில் பணிபுரியும் தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளும் சிபிஐ அலுவலகத்திற்கு வந்தனர். விஜய்யிடம் மட்டும் தனியாக 4 மணி நேரமாக விசாரணை நடந்து நிறைவு பெற்றுள்ளது.
அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.