சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

cbcid chennaipolice sylendrababu chennaiIIT sexualassaultcase researchstudents
By Swetha Subash Apr 12, 2022 07:03 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவியை கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை, சக ஆராய்ச்சி மாணவனான கிங்ஷீக்தேவ் சர்மா, தன் நண்பர்களும் ஆராய்ச்சி மாணவகர்களுமான சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு : சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு | Cbcid Takesover Chennai Iit Sexual Assault Case

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி இது குறித்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 29-ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்திலும், கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார்.

மாணவி அளித்த புகாரில் கிங்ஷீக்தேவ் சர்மா தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல் அதை புகைப்படம் எடுத்து பிளாக்மைல் செய்து தொடர்ந்து 4 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் இந்த வழக்கு மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. 

இதனை தொடர்ந்து மாணவி அளித்த புகாரின்பேரில் ஐஐடி ஆராய்ச்சி மாணவரான கிங்ஷீக்தேவ் ஷர்மா உள்பட 8 பேர் மீது ஐபிசி 354, 354(பி), 354(சி), 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில் மாதர் சங்கத்தின் தொடர் அழுத்தத்தின் காரணமாக மீண்டும் சூடுப்பிடிக்க துவங்கியுள்ளது.

மாதர் சங்கத்தின் அழுத்தத்தின் பேரில் குற்றவாளிகளை கைது செய்ய சென்னை மயிலாப்பூர் போலீசார் மேற்குவங்கம் விரைந்து கொல்கத்தாவில் தலைமறைவாக இருந்த கிங்ஷுகு தேப்சர்மாவை கடந்த மாதம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் அங்கு அவர் ஏற்கனவே தான் பெற்றிருந்த முன்ஜாமீன்  உத்தரவை காண்பித்து நீதிமன்றத்தால் விடுதலை செய்ப்பட்டார்.

இந்நிலையில் தற்போது ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மயிலாப்பூர் காவல்துறையிடமிருந்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.