பூனையின் உடலில் விநோத பொருள்; ஜெயிலில் அதிர்ச்சி - சினிமாவை மிஞ்சிய சம்பவம்
பூனை போதைப்பொருள் கடத்தி சென்ற வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா கடத்திய பூனை
கோஸ்டா ரிகா, போகோசி நகரில் சிறைச்சாலை உள்ளது. அந்த சிறைச்சாலையை சுற்றி பாதுகாப்பு காரணங்களுக்காக அதிநவீன கம்பி வலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த சிறைச்சாலையில், பூனை ஒன்று சந்தேகப்படும் விதமாக அமர்ந்திருந்துள்ளது. மேலும் பூனை மீது விநோதமான பொருள் இருந்ததை பாதுகாப்பு படையினர் கவனித்துள்ளனர்.
அதிகாரிகள் அதிர்ச்சி
தொடர்ந்து அருகில் சென்று பார்த்ததில், பூனையின் உடலில் ஒட்டப்பட்டிருந்த இரண்டு பாக்கெட்டுகளை பிரித்துப் பார்த்தனர். அதில், 235 கிராம் கஞ்சா, 67 கிராம் ஹெராயின் ஆகிய போதைப் பொருட்கள் இருந்துள்ளது.
பின் விசாரித்ததில் பூனையை பயன்படுத்தி சிறைக் கைதிகளுக்கு போதைப் பொருட்களை அனுப்பி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பூனையை மீட்டு கால்நடைகளுக்கான பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர். தற்போது, பூனையின் நடமாட்டம் குறித்து சிறை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
