தூக்கத்தில் மாரடைப்பால் துடிதுடித்த பெண் - மார்பில் தட்டி தட்டி எழுப்பி உயிரை காப்பாற்றிய பூனை...!

England
By Nandhini Aug 18, 2022 01:38 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

தூக்கத்தில் மாரடைப்பால் வந்து உயிருக்கு துடிதுடித்த பெண்ணை மார்பில் தட்டி எழுப்பி பூனை ஒன்று உயிர் காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூக்கத்தில் மாரடைப்பு

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் சாம் ஃபெல்ஸ்டெட் (42). இவர் ஒரு பூனையை குட்டியிலிருந்து மிகவும் அன்போடு அரவணைத்து வளர்த்து வந்தார்.

தற்போது அந்த பூனைக்கு 7 வயதாகிறது. இந்நிலையில், அதிகாலையில் சாம் ஃபெல்ஸ்டெட் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தூக்கத்திலேயே மாரடைப்பு வந்துள்ளது.

cat-saved-a-life

உயிரை காப்பாற்றிய பூனை

இதைக் கவனித்த அந்த பூனை சாம் ஃபெல்ஸ்டெட் மார்பில் ஏறி தட்டி, தட்டி கூச்சலிட்டு எழுப்பியது. ஆனால், சாம் ஃபெல்ஸ்டெட் மாரடைப்பால் உயிருக்கு போராடினார்.

பூனையோ இடைவிடாமல் மீண்டும், மீண்டும் அவர் மார்பு மீது ஏறி குதித்து தட்டி, தட்டி எழுப்பி கத்திக்கொண்டிருந்ததால், சாம் ஃபெல்ஸ்டெட் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.