பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்ட பிக்பாஸ் நடிகை - அதிர்ச்சி தகவல்
பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்பட்டது குறித்து நடிகை உர்ஃபி ஜாவித் பேசியிருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் உர்ஃபி ஜாவித், இந்தி பிக் பாஸின் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். வித்தியாசமாக உடை அணிவதற்கு பெயர் போன அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதில் பிற பெண்களை போன்றே என்னையும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்திருக்கிறார்கள். ஒருமுறை ஒருவர் என்னை படுக்கைக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்தினார். நான் முடியாது என்று கூறி கிளம்பிவிட்டேன். இந்த துறையில் இருக்கும் ஆண்கள் மிகவும் அதிகாரம் உள்ளவர்கள். உங்களை எந்த நேரத்திலும் ஒதுக்கி வைக்கலாம். இந்த துறையில் இருக்கும் சில பெரிய ஆட்கள் என்னை படுக்கைக்கு அழைத்தார்கள்.
அவர்களின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை. தற்போதும் எனக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது. மும்பைக்கு வந்தபோது நான் பிசியாக இருப்பேன் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு வேலையே கிடைக்கவில்லை. டிவியில் சிறு, சிறு கதாபாத்திரங்கள் தான் கிடைத்தது.
பணம் இல்லாததால் அந்த கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டியதாகிவிட்டது. சில ஆடை வடிவமைப்பாளர்கள் என்னுடன் சேர்ந்து வேலை செய்ய விரும்பவில்லை. என் உடைகளை மற்றவர்கள் கிண்டல் செய்வதால் அவர்களுக்கு என்னை பிடிக்கவில்லை என நடிகை உர்ஃபி ஜாவித் கூறியுள்ளார்.