நடிகர் சங்க தேர்தல் வெற்றி - படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய விஷால்

கொண்டாட்டம் casting-association-election actor vishal-celebration நடிகர் சங்க தேர்தல் வெற்றி கேக் வெட்டி நடிகர் விஷால்
By Nandhini Mar 21, 2022 05:08 AM GMT
Report

 கடந்த 2020ம் ஆண்டு நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாண்டவர் அணியில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சிமுருகன் ஆகியோர் போட்டியிட்டார்கள்.

சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் பாக்யராஜ், ஐசரி கணேஷ், பிரசாந்த், குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிட்டார்கள்.

ஆனால், இத்தேர்தல் நீதிமன்ற தடை காரணமாக 2 ஆண்டுகளாக வாக்கு எண்ணிக்கை எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.

இந்த தேர்தலில், பாக்யராஜ் 1054 வாக்குகள் பெற்றார். நாசர் 1701 வாக்குகள் பெற்று மீண்டும் தலைவரானார்.

பொதுச்செயலாளராக மீண்டும் நடிகர் விஷால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பொருளாளராக நடிகர் கார்த்தி தேர்வாகி இருக்கிறார்.

இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில், நடிகர் விஷால் ‘லத்தி’ படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.   

நடிகர் சங்க தேர்தல் வெற்றி - படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய விஷால் | Casting Association Election Vishal Celebration