சாதி, மதத்திற்கு எப்போதும் அப்பாற்பட்டவன் நான்: நடிகர் விஜய் சேதுபதி

cast vijay master vote sethupathi
By Jon Apr 07, 2021 09:53 AM GMT
Report

சாதி, மதத்திற்கு எப்போதும் நான் அப்பாற்பட்டவன் என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார். தமிழகத்தில் வாக்குப்பதிவு தற்போது தீவீரமாக நடந்து வருகிறது தற்போதைய நிலவரப்படி 40% வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் , காலை முதலே பிரபலங்கள் முதல் மக்கள் வரை அனைவரும் வரிசையில் நின்று, ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி, சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில்வாக்களித்து தனது ஜனநாயகக் கடமை ஆற்றினார்.  

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய்சேதுபதி சாதி, மதத்திற்கு எப்போதும் அப்பாற்பட்டவன் நான் என கூறினார். மேலும் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்தார் அப்போது விஜய் சைக்கிளில் வந்தது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜய்சேதுபதி, கருத்து எதுவும் கூற விரும்பவில்லை என தெரிவித்தார்.