சாதி பெயரை சொல்லி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட விசிக வழக்கறிஞர்

Police Advocate Caste name VCK Staion
By Thahir Nov 16, 2021 09:18 PM GMT
Report

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பார் கவுன்சில் செயலாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞருமான ராஜேஷ் என்பவர் குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று தனியார் பேருந்து மீது மோதியுள்ளார்.

இந்த விபத்து தொடர்பாக காவல் நிலையத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வழக்கறிஞர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

அந்த வழக்கின் மீது விசாரணைக்கு வந்த ராஜேஷ் காவல்நிலையத்தில் உள்ளே சென்று குடிபோதையில் ஆய்வாளர் மற்றும் எஸ்.பி ஆகியோரை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டியும், அங்குள்ள காவலர்களை நீ யார் உன்னை என்ன செய்கிறேன் என பார்த்து மிரட்டியும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கேஸ் கொடுத்தால் கண்டிப்பாக வெட்டுவேன். மற்ற சாதியினரை தரக்குறைவாகப் பேசிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக இணையதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, குடியோதையில் தகராறு செய்த வழக்கறிஞரும் பார் கவுன்சில் செயலாளருமான ராஜேஷ், ஆட்டோ ஓட்டுநர் சங்க தலைவர் ராஜா, சிவா உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.