சாதிகளை உருவாக்கியது கடவுள் இல்லை; பூசாரிகள் - ஆர்எஸ்எஸ் தலைவர்

Delhi
By Sumathi 1 மாதம் முன்

சாதி பாகுபாடை கடவுள் உருவாக்கவில்லை பண்டிதர்கள் தான் உருவாக்கினார்கள் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.

மோகன் பகவத் 

துறவி ஷிரோன்மணி ரோஹிதாசின் 647ஆம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்வில் பங்கேற்று மோகன் பகவத் உரையாற்றினர். அதில், "நாம் நமது வாழ்க்கையை வாழத் தொடங்கும் போதே சமூகத்தின் மீதான பொறுப்பும் கூடவே நமக்கு வருகிறது.நாம் அனைவரும் சமூகத்தின் உயர்ந்த நலனுக்காக வேலை செய்கிறோம்.

சாதிகளை உருவாக்கியது கடவுள் இல்லை; பூசாரிகள் - ஆர்எஸ்எஸ் தலைவர் | Caste Created By Hindu Priests Mohan Bhagwat

அப்படி இருக்க அந்த வேலையில் பெரிய வேலை, சிறிய வேலை என்ற பாகுபாடை பார்க்க முடியும். நம்மை படைத்த கடவுளின் முன் நாம் அனைவரும் சமமானவர்கள். சாதி பேதம் என்று ஏதும் இல்லை. இந்த சாதி பாகுபாடை பண்டிதர்கள் தான் உருவாக்கினார்கள்.

பூசாரிகள் தான்

அது தவறானது. நீங்கள் முன்னேற்றத்திற்காக உழைத்து சமூகத்தை ஒற்றுமையுடன் வைத்திருங்கள். அது தான் மதத்தின் சாரம். எந்த விதமான வேலை செய்தாலும் அந்த வேலைக்கு மரியாதை தர வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை தராததே வேலையின்மைக்கு முக்கிய காரணம்.

எல்லாரும் வேலைக்கு பின்னாள் ஓடுகிறார்கள். அரசால் 10 சதவீத வேலைதான் உருவாக்க முடியும்.மற்றவர்கள் 20 சதவீத வேலையை உருவாக்க முடியும். எந்த சமூகமும் 30 சதவீதத்தை தாண்டி வேலைகளை உருவாக்க முடியாது. எனவே, அனைத்து விதமான வேலைகளையும் மதிப்புடன் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும்." எனக் கூறினார்.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.