மரவள்ளி கிழங்கை இப்படி ஒரு முறை செய்து பாருங்க- இதை பாருங்க!
மரவள்ளிக் கிழங்கை வைத்து பிரெஞ்ச் பிரைஸ் எப்படி செய்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவரும் ருசித்து உண்ணக்கூடிய உணவாக உருளைக்கிழங்கு பிரெஞ்ச் பிரைஸ் உள்ளது. இதற்கு மாறாக மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு பிரெஞ்ச் பிரைஸ் செய்யலாம் .
தேவையான பொருட்கள்:
2-3 மரவள்ளிக் கிழங்கு
1/2 ஸ்பூன்மிளகாய் பொடி
1/4 ஸ்பூன்உப்பு
1/2 ஸ்பூன் பூண்டு பொடி
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
மரவள்ளிக் கிழங்கை கழுவி தோல் உரித்து சுத்தம் செய்து கழுவிக்கொண்டு மெல்லிய குச்சிகளாக வெட்டி கொள்ள வேண்டும். வெட்டிய துண்டுகளை உப்பு சேர்த்து தண்ணீரில் 10 - முதல் 15 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.
15 நிமிடங்கள் கழித்து நீரை வடித்து பின் ஒரு துணியில் வைத்து ஈரப்பதத்தை ஒத்தி எடுக்க வேண்டும். பின் அடுப்பில் எண்ணெய் காய வைத்து அதில் மரவள்ளி கிழங்கு துண்டுகளைப் பொன்னிறமாக்கும் வரை பொறிக்க வேண்டும்.
பின் மரவள்ளிக் கிழங்கு சூடு தணியும் வரை தனியாக வைக்க வேண்டும்.சூடு ஆறியவுடன் மீண்டும் எண்ணெய்யில் போட்டு 4-5 நிமிடங்கள் பொறிக்க வேண்டும். பின் இவற்றில் மிளகாய் பொடி, உப்பு, பூண்டு பொடி சேர்த்து சூடாக பரிமாறலாம் . சுவையான மரவள்ளிக் கிழங்கு பிரெஞ்ச் பிரைஸ் ரெடி