25 வயதுக்குள் கல்யாணம் பண்ணா இவ்வளவு பணப் பரிசா - பெண்களிடம் கெஞ்சும் அரசு!
25 வயதுக்குள் திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம்
மக்கள்தொகையில் நெம்.1 இடத்தை இந்தியாவிடம் பறிகொடுத்தது மட்டுமன்றி, கடந்த அரை நூற்றாண்டில் சீனா காணாத வரலாறாக அங்கே குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.
அரசு தரவுகளின் அடிப்படையில் கடந்தாண்டு திருமண விகிதம் 6.8 மில்லியன். அதற்கு முந்தைய ஆண்டை விட இது 8 லட்சம் குறைவாகும். இந்த நிலையை மாற்ற பல திட்டத்தை அரசு அறிமுகப்படுத்து வருகிறது.
ரொக்கப்பரிசு
அந்த வகையில், சாங்ஷான் அரசு, 25 அல்லது அதற்கு குறைவான வயதில் மணம் முடிக்கும் பெண்களுக்கு 1000 யுவான்(இந்திய மதிப்பில் ரூ,.11,000) வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
திருமண ஊக்குவிப்பு மட்டுமன்றி, கருவுறுதல், குழந்தைப் பேறு, வளர்ப்பு, குழந்தைக்கான கல்வி என பல்வேறு நிலைகளிலும் நிதியுதவித் திட்டங்களை அறிவித்துள்ளது.
இங்கு திருமண வயதாக ஆணுக்கு 22 மற்றும் பெண்ணுக்கு 20 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.