ஐபிஎல் கோப்பையை வெல்லப்போகும் அணிக்கு இத்தனை கோடியா? - வாயை பிளக்கும் ரசிகர்கள் ; முழு விவரம் இதோ!

Swetha Subash
in கிரிக்கெட்Report this article
தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் கடந்த மார்ச் 26-ந்தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்கியது.
வழக்கம் போல் 8 அணிகள் என்றில்லாமல் இந்த வருடம் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் என பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆஃப் சுற்றுக்கான ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்றன.
இந்த சுற்றுகளின் முடிவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான இறுதிப் போட்டி இன்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 8 மணியளவில் நடைபெறவுள்ளது.
அறிமுக தொடரிலேயே இறுதிப்போட்டி வரை வந்துள்ள குஜராத் அணி கோப்பையையும் வெல்ல வேண்டும் எனத் தீவிரமாக உள்ளது. மற்றொருபுறம் 2008-ம் ஆண்டுக்கு பிறகு 2-வது கோப்பையை வெல்ல ராஜஸ்தான் அணி முனைப்புடன் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது பெரிய எதிர்பார்ப்பாகவே இருக்கிறது.
இந்நிலையில், இந்தாண்டு ஐபிஎல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப்போகும் அணி மற்றும் 2-ம், 3-ம் இடங்களை பிடிக்கப்போகும் அணிகளுக்கு வழங்கப்படவுள்ள பரிசுத்தொகை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி 15-வது ஐபிஎல் தொடரை வெல்லப் போகும் அணிக்கு ஐபிஎல் கோப்பையுடன் சேர்ந்து ரூ.15 கோடி ரொக்க பரிசை பிசிசிஐ வழங்க உள்ளது.
அதேபோல் ஐபிஎல் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாயும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் தோல்வி அடைந்து மூன்றாவது இடத்தை பிடித்த அணிக்கு 7 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது.
இம்முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தான் 3-வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.