தலைமைச் செயலகத்தின் தரையை தோண்ட தோண்ட வரும் தங்க கட்டிகள் மற்றும் கோடிக்கணக்கான பணம்..!

Rajasthan
By Thahir May 21, 2023 05:49 AM GMT
Report

ராஜஸ்தான் மாநிலம் தலைமைச் செயலகத்தில் இருந்து 2 கோடியே 31 லட்ச ரூபாய் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தரையை தோண்ட தோண்ட வந்த தங்க கட்டிகள்

ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள யோஜ்னா பவன் கட்டிடத்தின் அடித்தளத்தில் பூட்டப்பட்ட அலமாரியில் இருந்து இரண்டு கோடியே 31 லட்ச ரூபாய் மற்றும் ஒரு கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த 7 அரசு ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

cash-gold-bar-seized-from-govt-building-in-jaipur

ரிசர்வ் வங்கி சார்பில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலகத்தில் இருந்து கட்டுக் கட்டாக 2000 ஆயிரம் ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஸ்கேன் செய்யப்பட்ட பல கோப்புகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிரதாப் சிங் பணத்தை பதுக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.